Categories: உலகம்

இனி இந்த நாடுகளுக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை.! எப்போது முதல் தெரியுமா.?

சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று.

இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும்  நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து,  கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் , அடுத்த வருடம் 2024இல் மே 10வரையில் இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு விசா தேவையில்லை என அறிவித்தது. இந்த விசா 30 நாட்கள் வரை அளிக்கப்படும் என கூறப்பட்டது.

தாய்லாந்து நாட்டை தொடர்ந்து தற்போது மலேசியாவும் இதனை அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாள் வரையில் சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் விசா இல்லாமல் பயணித்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா நாட்டு சுற்றுலா பயணிகளின் விவரப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 91.6 லட்சம் ஆகும். சீனாவிலிருந்து 4,98,540 மற்றும் இந்தியாவில் இருந்து 2,83,885 பெரும் வந்துள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட குறைவு ஆகும்.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

7 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

11 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

11 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

11 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

11 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

12 hours ago