Categories: Uncategory

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

  • குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்.

குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும்.

பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு வயதில் இருந்தே நாம் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு எந்த குறைபாடும் இருக்காது.

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள் பற்றி பார்ப்போம்.

பால் பொருட்கள்

குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய், தயிர் போன்றவற்றில் குழந்தைகளின் எலும்பை வலுவாக்கக் கூடிய கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

மேலும், இவற்றில் புரோட்டீன் சத்துக்கள்  அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், அவர்களின் கால்களின் பாதங்களின் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.

காய்கறிகள்

காய்கறி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சத்தான ஆகாரம் தான். இதில் உள்ள சத்துக்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, குழந்தைகளின் கை மற்றும் கால்கள் வலு பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

காய்கறியில், கால்சியம் மற்றும் நார்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உணவாக கொடுக்கலாம்.

பருப்பு வகைகள்

 

குழந்தைகளுக்கு பருப்பு வகைகள் மிகவும் ஆரோக்கியமான உணவுகள். பருப்பு வகைகளான பாசிப்பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

ஆரஞ்சு

குழந்தைகளுக்கு பழவகைகளில் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அனைத்து வகையான பழங்களையும் கொடுக்கலாம். ஆரஞ்சு பழத்தில் மட்டும் தான் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது என்று யாரும் நினைக்க வேண்டாம்.

ஆனால், ஆரஞ்சு பழத்தை ஜூஸாக கொடுத்தால், அது குழந்தைகளுக்கு வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக கொடுத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

நட்ஸ்

குழந்தைகளின் உடலுக்கு நட்ஸ் ஆரோக்கியத்தை அளிக்கிறது. நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் குழந்தைகளின் பாதங்கள் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும், இது குழந்தைகளுக்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் சத்துக்களை அளிக்கிறது.

மீன்

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் மீன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. மீன் வகைகளில் குழந்தைகளுக்கு சால்மன், மாத்தி போன்ற மீன்களை கொடுக்கலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்களின் வலிமையையும் அதிகரிக்கிறது.

முட்டை

முட்டை குழந்தைகளுக்கு பிடித்தமான உணவும், ஆரோக்கியமான உணவும் கூட. இந்த முட்டையில், அத்தியாவசிய புரோட்டீன்கள் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களது வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

4 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

10 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

10 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

10 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

10 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

11 hours ago