தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிட உள்ளதாகவும் ,குறிப்பாக அடுத்த வாரத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று கர்ணன் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் இசைப்பணிகள் நடக்கும் இசைக்கருவிகளின் புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…