குரூப் 4 தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு.! இன்று முதல் பதிவேற்றம் – TNPSC அறிவிப்பு.!

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.

தற்போது, இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி  நடந்து வருகிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் விடுபட்ட சான்றிதழை இன்று முதல் ஜூன் 7 வரை பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, TNPSC நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சரிபார்ப்புக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமல், குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 05.06.2023 முதல் 07.06.2023 மாலை 05.45 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு, தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

32 mins ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

37 mins ago

இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?

சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…

53 mins ago

பிசிசிஐக்கு உதவும் தோனி? ஃபிளெமிங்கை தலைமை பயிற்சியாளராக சம்மதிக்க வைக்க புதிய திட்டம்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான…

1 hour ago

பாரம்பரியமிக்க பருப்பு உருண்டை குழம்பு இதுபோல செஞ்சி கொடுங்க..!

பருப்பு உருண்டை குழம்பு -பாரம்பரியமான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கடலை பருப்பு =அரை கப் துவரம்…

1 hour ago

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்…

2 hours ago