மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினார். டெல்லி- ஹரியானா எல்லையான சிங்குவில் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு டெல்லியை நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், குடியரசு தினமான இன்று பிராமாண்ட டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி, இன்று ஒரு புறம் குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபுறம் விவசாயிகள் அறிவித்தபடி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணி சிங்கு, காசிப்பூர், பல்வால், திக்ரி, ஷாஜகான்பூர் ஆகிய 5 பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…