இந்தியா

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த ​​பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று கொண்டு இருந்த அந்த பேருந்து திடீரென ஓட்டுநர் இல்லாமலே மெதுவாக நகர்ந்து அருகில் அமர்ந்து பைக்கிற்கு காற்று அடித்து கொண்டிருந்த ஊழியர் மிதி மோதியது.

பின்னர் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் வேகமாக பேருந்தை நோக்கி ஓடினார்கள். பிறகு இதில் படுகாயம் அடைந்த  ஊழியர் தேஜ்பாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் இல்லாத பேருந்து ஒருவர் மீது மோதிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சியான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதுகுறித்து மாநகர இன்ஸ்பெக்டர் சஞ்சய் பாண்டே கூறுகையில், சக்கரங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த செங்கற்கள் அகற்றப்பட்டதாலும், பஸ் நின்ற இடத்துக்கு அருகே சரிவு இருந்ததாலும் விபத்து ஏற்பட்டது என கூறினார்.

Recent Posts

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் கிருமிகள் ..!பிளான் – B ரெடி ..!

ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின்…

1 min ago

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

2 mins ago

ஸ்வீட் பிரியர்களே..! இனிப்புச் சுவை பிடிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதாம்..

Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது  அதற்கு அடிமையாகி  இருப்பதோ அல்லது…

25 mins ago

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக…

43 mins ago

யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி கூப்பிடுமா? புதிய ஆய்வில் ஆச்சரிய தகவல்!

கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு…

1 hour ago

கமல்ஹாசன் கூட ஒரு படம் தான் எடுக்க முடியும்.! நழுவிய இயக்குனர்கள்..?

கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம்  மற்றும் இயக்கம்  என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…

1 hour ago