நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்தவாறு ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 23 மாவட்டத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,  நெல்லை, குமாரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னையில் 16 தூண்டில் வலை, கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கு முன் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டது.

மேலும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் காவிரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கொள்கை குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

11 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

5 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago