திமுக கூட்டணி!! இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று காலை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது

மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் நேற்று (மார்ச் 2 ஆம் தேதி) அண்ணா அறிவாலயத்துக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் சென்றார்.அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில்  ஏற்கனவே முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று காலை  2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  மற்ற தோழமை கட்சிகளையும் அழைத்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

35 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

47 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

1 hour ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

1 hour ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago