ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு சொந்தமான ஆலையில் சோதனை.!

  • டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை.

டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த வன்முறையில் மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த கொலையில்  ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு ஏற்றாற்போல தாஹிர் வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடையில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் மீட்கப்பட்டதால் தாகிர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று குடியரசு தலைவரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் பல மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என கூறினார். மேலும் கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது எனவும்  தாகீர் உசேன் வீடு கலகத் தொழிற்சாலை என்பதைக் காட்டும் வீடியோ உள்ளது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

3 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

3 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

3 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

3 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

4 hours ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

4 hours ago