குடியுரிமை திருத்த சட்டம்: ஏன் முஸ்லீம்கள் இல்லை ? பாஜக துணைத் தலைவர் கேள்வி

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • குடியுரிமை திருத்த சட்டத்தில்  ஏன் முஸ்லீம்களை மட்டும் இணைக்கவில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியிட்டுள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்தும்,போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது ஆளும் பாஜகவின் துணைத் தலைவர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் சந்திர குமார் போஸ்.இவர் சுதந்திர போராட்டத் தலைவர்களின் முக்கியமான ஒருவராக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவுமுறை கொள்ளுப்பேரன் ஆவார்.இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எந்த மதத்துக்கும் தொடர்பு இல்லை என்றால், ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளை ஏன் பிரித்து பார்க்கவேண்டும்.


குறிப்பாக அதில் ஏன் முஸ்லீம்களை மட்டும் இணைக்கப்படவில்லை.இது எல்லாம் வெளிப்படையாக இருக்கட்டும்.எல்லா மத, இன மக்களும் சரி சமமான  அளவில் நடத்தப்படும் மதசார்பற்ற நாடான இந்தியாவை மற்ற வேறு எந்த ஒரு நாடோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.