சிபிஐ விசாரணை : மாநில அரசின் அனுமதி தேவை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, எந்த மாநிலத்திலும் குற்றங்கள் குறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். அதேவேளையில் மாநில அரசுக்கு, இந்த அதிகாரத்தை வாபஸ் பெறுவதற்குஉரிமை உள்ளது. இந்நிலையில்,  உச்ச நீதிமன்றத்திற்க்கு, மாநில அரசு ஒப்புதல் பெறாமலேயே எந்த மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு வழக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்னவென்றால்,டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு  6-ன் கீழ் மாநில அரசு அனுமதி இல்லாமல், சிபிஐ அந்த மாநிலத்துக்குள் விசாரணை நடத்த முடியாது என்றும், மாநில அரசு இந்த 6-வது பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து விட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்புதான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில், அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு, டெல்லி சிறப்பு காவல் சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆந்திராவுக்கு சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது.  மத்திய பாஜக அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ-யை பயன்படுத்தக் கூடும் என்று எண்ணி, முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்,  சந்திரத்பாபு நாயுடு உத்தரவிட்டது போலவே, மேற்கு வங்கத்திலும், உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

2 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

2 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

3 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

3 hours ago

மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!

சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…

3 hours ago

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…

3 hours ago