2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மெரினா கடற்கரையில் ஹெலிகாப்டர் மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை.!

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னை காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமான கூட்டத்தை விட அதிகளவு கூட்டம் நிரம்பி வருவதால் காவல்துறையின் கட்டுப்பாடுகளும் அதிகரித்து உள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் யாருக்கும்குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருவதால், காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் … Read more

அவசரகால கதவை திறந்த விவகாரம்.! உருட்டாமல் இருந்தால் சரி.! அமைச்சர் செந்தில் பாலாஜி டிவீட்.!

வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. -அமைச்சர் செந்தில் பாலாஜி.   திருச்சி விமான நிலையைத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணிக்கையில் 2 தேசிய கட்சி பிரமுகர்கள் அவசரகால கதவை திறந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது மேலும், விமானம் புறப்படும் நேரமும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தாமதமானது. இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது விமானத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..! காரை பரிசாக பெற்றவர் இவர் தான்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற தற்போது  நிறைவடைந்துள்ளது. இதில் 10 சுற்றுகள் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 820 மாடுகள் களமிறங்கிய நிலையில், 304 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் … Read more

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்..! விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்து இயக்குனரகம்..!

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  கடந்த மாதம் திருச்சியில் இண்டிகோ விமானத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்டதால், காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறந்ததால், சுமார் 2.30 மணி நேரம் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த அவசரகால கதவை திறந்தது தேசிய கட்சி பிரமுகர் என செய்திகள் வெளியாகின. … Read more

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.! ஜல்லிக்கட்டு காளைகள் உட்பட இருவர் உயிரிழப்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு லாரியில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி கொண்டு ஊர் திரும்புகையில்,  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. \ இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், லாரியில் இருந்த 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழந்துள்ளது. ஜல்லிக்கட்டு பொட்டியில் பங்கேற்று … Read more

அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு..! முதல்வர் இரங்கல்..!

அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவுக்கு முதல்வர் இரங்கல்.  அமைச்சர் பொன்முடியின் தம்பியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து  உள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் க. தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதி.!

குடிநீர்தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். – அமைச்சர் ரகுபதி பேட்டி.  குடிநீர்தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்த  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஊரில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமத்துவ பொங்கல் விழா நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், சமத்துவ பொங்கல் விழா இனிதே … Read more

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.! – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.  – தமிழிசை சௌந்தரராஜன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என பலரும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், என் திருமணத்தை நடத்தி வைத்தவர் … Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும் – டிடிவி

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார் என டிடிவி பேட்டி.  விழுப்புரம் கோட்டக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது; இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும் என தெரிவித்துள்ளார்.  மேலும், தமிழ்நாடு … Read more