டெல்லி விமான நிலையத்தில் சோதனை..! 3.7 கோடி பறிமுதல்..!

டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் 3 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு முனையத்தில் வழக்கமான சோதனைகள் நடைபெற்றது. அந்த சோதனையில் மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். டெல்லி போலீசார் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று … Read more

கேரளாவின் ஆலப்புழாவில் கார் விபத்து! 5 இஸ்ரோ ஊழியர்கள் உயிரிழந்தனர்.!

கேரளாவின் ஆலப்புழாவில், கார் மோதிய விபத்தில் இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்தவர்கள் என்பதும், திருமண விழாவை முடித்துக்கொண்டு திரும்பும் போது அதிகாலை 1:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் … Read more

ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் போன்கள்..! ஏற்றுமதியில் அசத்தும் ஆப்பிள்..!

இந்தியாவில் இருந்து ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் போன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வருகிறது. தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கை விட ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் மேக்-இன்-இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் 1 பில்லியன் டாலர் (7500 கோடி) மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. டிசம்பர் … Read more

சோமேட்டோ ரகசியத்தை வெளிப்படுத்திய ஊழியர்.! உண்மையை போட்டுடைத்த வாடிக்கையாளர்.!

சோமேட்டோவின் உணவு டெலிவரியில் நடக்கும் மோசடி குறித்து வாடிக்கையாளர், தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ, குறித்த நேரத்திற்குள் உணவுகளை விநியோகம் செய்யும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலியைக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த சோமேட்டோவில் வாடிக்கையாளர் ஒருவர், தனது அனுபவத்தையும் இங்கு நடக்கும் மோசடி குறித்தும் பகிர்ந்துள்ளார். அவர் உணவு ஆர்டர் செய்து அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு, சோமேட்டோ ஊழியரிடம் உணவைப் பெற்றுக்கொண்டார், அப்போது சோமேட்டோ ஊழியர், நீங்கள் அடுத்தமுறை ஆன்லைனில் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1934 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,735 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,346 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,28,44,815 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் … Read more

Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 450 புள்ளிகள் அதிகரித்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 61,072 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 450 புள்ளிகள் அல்லது 0.74% என உயர்ந்து 61,072 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 127 புள்ளிகள் அல்லது 0.71% உயர்ந்து 18,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,621 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,027 ஆகவும் நிறைவடைந்தது.

உண்மையான ஆண்கள், பெண்களை கொடுமைப்படுத்துவதில்லை- கேரள உயர்நீதிமன்றம்.!

பாலியல் துன்புறுத்தல் ஒன்றும் விளையாட்டு அல்ல, உண்மையான ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதிக்கப்படுவது குறித்து அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் இருந்து நாம் குழந்தைகளுக்கு, ஒழுக்கம் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டும். ஆரம்ப வகுப்பு முதல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒழுக்க நெறிமுறைகள் குறித்து கற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று கூறியது. பாலியல் குற்றங்கள் ஏற்கத்தக்கது அல்ல, இது … Read more

2021-22ல் அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பிய இந்திய நகரம் இது தான்.!

2021-22ஆம் ஆண்டில் ஹைதராபாத், அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக தகவல். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 2021-22ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரத்திலிருந்து அதிகமான மாணவர்கள் படிக்கச்சென்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, 2.6 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர், அவர்களில் சுமார் 75,000 பேர் இந்தியர்கள் என்று ஓபன் டோர்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்திய மாணவர்களில் 30% ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது ஹைதராபாத், மும்பை … Read more

நான் ChatGPTக்கு அடிமையாகிவிட்டேன்- கௌதம் அதானி

நான் சாட்GPT ஐப் பயன்படுத்தத் தொடங்கி அதற்கு அடிமையாகிவிட்டேன் என கோடீஸ்வரர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் தற்போது பரவலாகப் பேசப்பட்டுவரும் சாட்GPT, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு புதிய முயற்சியாக கருதப்பட்டு வருகிறது. மக்கள் பலரும் இதனைப் பயன்படுத்தி சாட்GPT(பாட்) உடன் உரையாடல் நடத்தி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான இந்தியாவின்,  கௌதம் அதானி சாட்GPTயை தான் பயன்படுத்தத்தொடங்கி அதற்கு அடிமையாகிவிட்டதாக கூறியுள்ளார். 60 வயதான பில்லியனர் … Read more

பிரதமரின் பேரணியின் போது, அத்துமீறி உள்நுழைந்தவர் கைது.!

மும்பையில் பிரதமரின் பேரணியின், விவிஐபி(VVIP) பகுதிக்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியின், பொதுப்பேரணியின் போது மிகமிக முக்கிய நபர்களை மட்டும் அனுமத்திக்கும் விவிஐபி(VVIP) பகுதிக்குள் அத்துமீறி ஒருநபர் நுழைய முயன்றுள்ளார். அவரை போலீசார் விசாரித்த போது, தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), என்ற பெயரில் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அடையாள அட்டையில் சந்தேகம் இருப்பதாக போலீசார் உணர்ந்தனர். இதனையடுத்து தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) என்ற பெயரில் போலி அடையாள … Read more