கேப்டன் வருண் சிங்கின் வீரமும் தியாகமும் அளப்பரியது – எடப்பாடி பழனிசாமி

குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு,கடுமையாக போராடி வந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என ஈபிஎஸ் ட்வீட்.

நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வருணசிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு,கடுமையாக போராடி வந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரது வீரமும் தியாகமும் அளப்பரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

22 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

32 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

36 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago