#BREAKING: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் – அரசாணை வெளியீடு!

ஐஐடி, ஐஐஎம்-க்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு.

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவ மாணவிகள் IIT, IIM, AIIMS-களில் சேர்ந்தால் அதன் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப்பள்ளி மாணாக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணாக்கர்கள் இந்த உதவியைப் பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அரசு நன்கு ஆய்வு செய்து, 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணாக்கர்களுக்கு அவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் வழங்குவதற்காக கீழ்க்காணும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை வகுத்து அனுப்பப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

  • இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்கள், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும்.
  • மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணாக்கர்கள், அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், அம்மாணாக்கர்களின் சொந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
  • மாவட்ட ஆட்சித்தலைவர், விண்ணப்பித்த மாணாக்கர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து, மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணாக்கர்களின் படிப்பிற்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பவேண்டும்.
  • சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெறப்படும் பரிந்துரையினை ஆராய்ந்து, உயர்கல்விக்காக ஆகும் மொத்த செலவினத்தினை கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அரசுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.
  • அரசுபள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதை ஊக்குவிப்பதற்காக சாதிப் பாகுபாடின்றியும், ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணாக்கர்களின் விவரங்கள், மாவட்ட இயக்ககத்தின் கருத்துருவினை ஆய்வு செய்து நன்றாக பரிசீலித்து, முதலாம் ஆண்டிலேயே, நான்கு ஆண்டுகளுக்கான செலவினத் கல்வி ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆணையரே அம்மாணவருக்கு செலவினை தொகைக்கு நிர்வாக ஒப்புதலினை அளித்தும், முதலாம் ஆண்டிற்கான செலவினை ஒப்பளிப்பு செய்தும் அரசால் ஆணை வெளியிடப்படும்.
  • அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கருத்துருவினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்று தொழில்நுட்ப கல்வி ஆணையரே அம்மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்குமான செலவின வழங்கலாம். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும், சரிபார்த்தலை விரைவாக முடிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும் ஒரு இணைய தளம் (Online Portal) தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் ஏற்படுத்தப்படும்.

Recent Posts

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…

16 mins ago

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

9 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

13 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

13 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

13 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

14 hours ago