Categories: Uncategory

முகப்பரு வராமல் தடுக்க ஒரு எளிய வழி!

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதைகவனத்தில்எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.
முகப்பரு வராமல் தடுக்க உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகும் உணவையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
தலையில் எண்ணெய் அதிகாமாக தேய்க்ககூடாது. அதனால் முகத்தில் எண்ணெய் வழிந்து முகபரு ஏற்பட காரணமாகிவிடும். வெதுவெதுப்பான நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது. முகப்பருக்களை கிள்ளக்கூடாது, அதை கிள்ளினால் முகத்தில் வடு ஏற்பட்டு விடும்.

முகப்பருவுக்கு வேப்பங் கொழுந்து, வெந்தயம், கடலை மாவு, சந்தனத்தை பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பருக்கள் மீது தடவலாம். வேப்பிலை கொழுந்தை அரைத்தும் தேய்க்கலாம். கடலை மாவுடன் தயிரை கலந்து பருக்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பச்சை வெள்ளைப் பூண்டை பருக்கள் மீது தடவி வந்தாலும் பருக்கள் மறையும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகப்பருவில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
மூன்று மாதங்கள் இதை கடைப்பிடித்து வந்தால் முகப்பருக்களை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.
Castro Murugan
Tags: health

Recent Posts

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

23 mins ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

11 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

16 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

16 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

16 hours ago