வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பெங்காலி சம்பவம்… எம்எஸ் தோனி பகிர்ந்த சுவாரஸ்யம்!

வங்கதேசத்துக்கு எதிரான  போட்டியில் நடந்த பெங்காலி சம்பவம் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி சுவாரஸ்யமாக தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, வங்கதேச கிரிக்கெட் வீரர்களை எப்படி ஏமாற்றி, களத்தில் உள்ள உத்திகள் குறித்த தகவல்களை திரட்டியது எப்படி என்ற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றில் பேசிய எம்எஸ் தோனி, காரக்பூரில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியதால் பெங்காலியைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது, சுற்றி இருப்பவர்கள் பெங்காலி பேசுவார்கள், அதனால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருமுறை வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன். தெரியும் என்றும் வங்கதேச வீரர்களுக்கு தெரியாது.

2023 பலோன் டி’ஓர் விருது : சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.!

எனக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று கீப்பர் பெங்காலி மொழியில் பவுலருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அதனால் பவுலர் எப்படி பந்துவீச போகிறார் என்று எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அப்போட்டி முடிந்த பிறகு அவர்கள் பேசுவதை பார்த்து ரியாக்சன் கொடுத்தேன். அப்போது “ஹே இவருக்கு பெங்காலி புரிகிறது” என ஷாக் ஆனார்கள் என சுவாரஸ்யமாக தகவலை பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, தோனி காரக்பூரில் டிக்கெட் கலெக்டராக இருந்ததால் பெங்காலியைப் புரிந்து கொள்ள முடியும் என்று வெளிப்படுத்தினார். மேற்கு வங்கத்தில் அதிக நாட்கள் கழித்துள்ளார். பல கிளப் அளவிலான போட்டிகளில் விளையாடினார். இதன் காரணமாக, அவர் பெங்காலியை நன்றாகப் புரிந்துகொள்கிறார். இது தெரியாமல் வங்கதேச வீரர்கள் பெங்காலியில் பேசி தோனியிடம் ஏமாந்துள்ளனர். இந்த சமயத்தில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பெங்காலி சம்பவம் குறித்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார் தோனி.