Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுதமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே  கலந்தாய்வு நடத்தி  காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org  என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர்அறிவுறுத்தியுளளார்.

அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதற்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.