Thursday, November 30, 2023
Homeசினிமாலியோ வெற்றி விழாவில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை! ரசிகர்களுக்கு ஷாக்...

லியோ வெற்றி விழாவில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை! ரசிகர்களுக்கு ஷாக்…

லியோ திரைப்பட வெற்றிவிழாவில், விழாவுக்கான பாஸ் மற்றும் ஆதார் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், உலகம் முழுவதும் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (நவம்பர் 1ஆம் தேதி) கொண்டாட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அரங்கில் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி, இந்த விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் நடிகர் விஜய் ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா என தளபதி ரசிகர்கள் அறவுமுடன் காத்திருக்கிருக்கிறார்கள். முன்னதாக, நடைபெற இருந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பதால், இந்த வெற்றி விழாவை காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆதார் – பாஸ் முக்கியம் 

இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டிக்கெட் உடன் ஆதாரை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்வும் ஆதார் இல்லையென்றால் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரும் ரசிகர்கள் நாளை மாலை 4 மணி முதல் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆன்லைன் டிக்கெட்கள்

இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்திருந்தார். அதற்கு காவல்துறை தரப்பில் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, லியோ படத்தின் வெற்றி விழாக்கான டிக்கெட்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய படக்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!

முன்னதாக, அதிகப்படியான ரசிகர்களுக்கு கூட்டங்களுக்கு பாஸ்கள் கொடுக்க முடியாத காரணத்தால், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக, முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். இதனால், நாளை நடைபெறவுள்ள வெற்றி விழாவுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் முடிவால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தடையில்லா சான்றிதழ்

இதற்கிடையில், இந்த விழாவுக்கு தடையில்லா சான்றிதழ் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் அவசியம் தேவை. இந்நிலையில், காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஹா! 400 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்திய அஜித்…’கிப்ட்’ கொடுத்து நெகிழ வைத்த விஜய்!

கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

லியோ வெற்றி விழாவுக்கு வரும் ரசிகர்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நீ சில்லறை பையன் தான்! கூல் சுரேஷை சீண்டிய பிரதீப்! எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!

விஜய் வருவாரா?

ஒரு பக்கம், காவல்துறையினர் அனுமதி வழங்கினாலும் தளபதி விஜய் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவர் வருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தின் கெட்டப் வெளியே தெரிந்து விடும் எனபதால், வருகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்