முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் ஆஸ்திரேலியா அணி 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு இருந்தபோது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற நிலையில் மீண்டும் போட்டி தொடங்கியது. களத்தில்  நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 26 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்க இறுதியில் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 66 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தனர்.

களத்தில் டிராவிஸ் ஹெட் 9* ரன்களுடனும்,  மார்னஸ் லாபுஸ்சாக்னே 44* ரன்களுடனும் இருந்த நிலையில், இன்று காலை மீண்டும் 2-வது நாள் போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் டிராவிஸ் ஹெட் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மார்னஸ் லாபுஸ்சாக்னே 63 ரன்கள் எடுத்தபோது ஷபீக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  பின்னர் அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 4, மிட்செல் ஸ்டார்க் 9, கேப்டன் பாட் கம்மின்ஸ் 13, நாதன் லியோன் 8 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 60 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 41 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 41 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

33 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

42 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago