இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு… காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் கெஜ்ரிவால்!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், டெல்லியில் தனது ஆட்சியை கலைக்க பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்தார்.

இந்த சூழல், டெல்லி சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளன, பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. இருந்தாலும், சட்டப்பேரவையில் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கோரினார்.

திடீர் திருப்பம்! டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பொய்யான வழக்குகளை போட்டு கட்சிகளையும், ஆட்சிகளையும் உடைக்க பாக்கிறார்கள். இதனால், எங்கள் எம்எல்ஏக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டியதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, டெல்லி முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், காணொளி மூலமாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததால், அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று காணொளி மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலவில்லை என கூறியுள்ளார். இதன்பின் இவ்வழக்கு தொடர்பாக மார்ச் 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இன்னும் சற்று நேரத்தில் டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.

Leave a Comment