தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.! அப்பாவு விளக்கம்!

சென்னை : நேற்று முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்க இருந்தது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று கறுப்புசட்டை அணிந்துகொண்டு  சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அப்போது சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்க முனைகையில், அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன் பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகளை இப்போது ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும் எனவும் வசனங்கள் அடங்கிய காகிதங்களையும் சட்டப்பேரவையில் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து, 10 மணி முதல் 11 மணிவரை கேள்வி நேரம் முடிந்த பின்னர் தான் விவாதம் நடைபெறும் என்று கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை பாதுகாவலர்கள் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால், தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், விஷச் சாராய விவகாரம் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும் என பலமுறை கூறியும் அதிமுகவினர் அமளி ஈடுபட்டதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அப்பாவு”சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பற்றி பேச அனுமதி மறுக்கவில்லை. மறுக்காத பட்சத்தில், இந்த அவையில் மாண்பை குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

விஷச் சாராய விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு திர்மானம் கொண்டு வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என பல முறை கூறியும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  சட்டத்திற்கு புறம்பாக, விதிக்கு புறம்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பதாதைகளை கொண்டு வந்து அதை காட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது” என அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Recent Posts

வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற…

3 mins ago

இதோட நிறுத்திக்கோங்க…AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்.? தேமுதிக முக்கிய அறிக்கை.!

விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு…

19 mins ago

வாகனங்கள் மீது வேகமாக மோதி சென்ற பள்ளிப்பேருந்து !வைரலாகும் வீடியோ!

ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான…

19 mins ago

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான்…

27 mins ago

10 ரூபாய் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

மும்பை : ரிக்‌ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை  கடுமையாக ரிக்‌ஷா…

37 mins ago

என்னை மன்னித்து விடுங்கள்.. தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்.!

UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர்,  " இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்." என பேசினார். பிரிட்டன்…

1 hour ago