நாடாளுமன்ற தேர்தல்! திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு: வேட்பாளரும் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்றொரு கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுகவில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Read More – முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை..!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், “திமுக கூட்டணியில் எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி எம்பி போட்டியிடுகிறார், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளோம் என்றார். அதே போன்று நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment