புதுச்சேரியில் ஜூன் 8 முதல் இவற்றையெல்லாம் திறக்கலாம் – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கான தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். டீ கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது என்றும் கடற்கரை, பாரதி பூங்கா போன்றவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…

14 mins ago

மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?

Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…

16 mins ago

புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…

52 mins ago

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

மத சடங்குகள் இல்லையா.? இந்து திருமணம் செல்லாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…

1 hour ago

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

2 hours ago