Monday, June 3, 2024

உங்களுடைய படத்தில் நடிக்கணும்…வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து வாய்ப்பு கேட்ட அஜித்.!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கஷ்டடி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கியபோதே வெங்கட் பிரபுவுக்கும் அஜித்திற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது என்றே கூறலாம். பல பேட்டிகளில் அஜித் பற்றி அவரும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தும் உள்ளார்.

ajith and venkat prabhu
ajith and venkat prabhu [Image Source : Twitter]

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு ” நான் சென்னை-28  திரைப்படம் செய்துகொண்டிருந்த சமயத்தில்  திடீர்னு புது நம்பர்ல இருந்து கால் வந்தது. எடுத்து பேசும்போது ஒருவர்  ‘நானும் சென்னை-28தான், நல்லா பௌலிங் போடுவேன்.

Ajith Kumar AND Venkat Prabhu
Ajith Kumar AND Venkat Prabhu [Image Source : Twitter]

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனக்கு உங்களுடைய படத்தில் நடிக்குறதுக்கு எதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க என்று பேசுனாங்க. ஆரம்பத்துல எனக்குக் குரல் யாருடையது என்று தெரியவில்லை. அப்புறம்தான் தெரிஞ்சது அப்படி பேசுனது அஜித் சார்னு. என்னை அவர் பயங்கரமா கலாய்ப்பார்”  என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Ajith Kumar AND Venkat Prabhu 3
Ajith Kumar AND Venkat Prabhu 3 [Image Source : Twitter]

மேலும் நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES