வேளாண் பட்ஜெட் – முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை. 

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி அறிக்கை

அந்த  அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு. நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.

பல இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை. வரகு. குதிரைவாலி போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது.

இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும். அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் அரசு வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

9 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

9 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

9 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

9 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

10 hours ago