கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது திரைப்படம்?

பிரபல நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 மதியம் கோவாவில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

READ MORE – உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது!

திருமணம் முடிந்ததை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் மீண்டும் தான் கமிட் ஆகி இருக்கும் படங்களில் நடிக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இந்த பிஸியான நேரத்திலும் கூட புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்  சமீபத்தில் வெளியான ஷைத்தான் படத்தையும் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

படத்தை பார்த்துவிட்டு ரகுல் ப்ரீத் சிங்  தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ஷைத்தான் மிகவும் அருமையான  படம்.. என்ன கதைக்கரு, மனதைக் கவரும் நடிப்பு, அட்டகாசமான நடிப்பு..படத்தை பார்த்துவிட்டுகண்ணை கூட மூட முடியவில்லை அந்த அளவுக்கு கண்ணுக்குள்ளே நிக்குது. சூப்பரான படம் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி வெளியான இந்த ‘ஷைத்தான்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்துவிட்டு புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் தனது விமர்சனத்தை கூறியிருப்பது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Comment