Categories: Uncategory

ஸ்மார்ட் ஏபி டீவில்லியர்ஸ்!லயன் பந்தை எறிந்த பின்னும் வாக்குவாதம் செய்யாமல் சென்ற ஏபிடீ…..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனபோது அவர் மார்பு மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயானுக்கு அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  டர்பனில் நடந்தது. இதில் 118 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் வீசிய ஓவரில் ஒரு ரன் எடுக்க முற்பட்டு தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவ்லிலயர்ஸ் ரன் அவுட் ஆனார்.

டீவில்லியர்ஸ் அடித்த பந்தை வார்னர் பீல்டிங் செய்து லயானிடம் எறிந்தார். அவர் ரன் அவுட் செய்யும்போது, கிரீஸ் கோட்டை தொடும் முயற்சியில் டீவில்லியர்ஸ் கீழே விழுந்தார். இருந்தபோதிலும் லயான் ரன் அவுட் செய்து, அவரை கிண்டல் செய்யும் விதமாக, தான் வைத்திருந்த பந்தை டீவில்லியர்ஸ் மார்பில் வீசி எறிந்துவிட்டுச் சென்றார். மேலும், அங்கிருந்த பேட்ஸ்மன் எய்டன் மார்க்ரமை கிண்டல் செய்துவிட்டுச் சென்றார்.

நாதன் லயான் செயலைப் பார்த்தும் ஆத்திரமடையாத டீவில்லியர்ஸ் அவருடன் எந்தவிதமான வாக்குவாதமும் செய்யாமல் கண்ணியமாக களத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்பின் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபின் இது தொடர்பாக டீவில்லியர்ஸிடம், லயான் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை ஆய்வு செய்த ஐசிசி நடுவர் போட்டியின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்துக்காக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயானுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago