58 வயதில் 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் உற்சாக நடனம்.!

By

விண்வெளி ஆய்வு மையம் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3வது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, 2006 மற்றும் 2012ம் ஆண்டு என இரண்டு முறை விண்வெளி சென்ற அவர், இதுவரை 322 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறார்.

58 வயதான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின்போயிங் என்ற நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலம் மூலம், தற்போது விண்வெளி மயத்திற்கு சென்றுள்ளார். அவருடன், அமெரிக்கக் கடற்படை முன்னாள் கேப்டனுமான புட்ச் வில்மோரும் சென்றிருக்கிறார்.

அந்த விண்கலத்தின் மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இம்முறை, சுனிதா விநாயகர் சிலை, பகவத் கீதையையும் தன்னுடன் கொண்டு சென்றுள்ளாராம். ஒருவாரம் அங்குத் தங்கியிருந்து விண்கலனின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றடைந்த அவர், தனது குழுவினருடன் விண்வெளியில் உற்சாகமாக நடனமாடிய காணொளி வைரலாகி வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக அடைந்ததை இப்படி கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்தினர்.

Dinasuvadu Media @2023