#INDvsENG : பழிக்கு பழி … இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதத்தால் இந்திய அணி  396 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது. இதனால் 143 ரன்கள் முன்னிலை உடன்  2-வது இன்னிங்சை  இந்திய அணி தொடங்கியது. இதில் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தால் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். இதைத்தொடர்ந்து,  2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை இந்தியா நிர்ணயித்தது.

#INDvsENG : வரலாற்று சாதனையை  படைத்தார் அஸ்வின்..!

அதன்படி விளையாடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டையும்,  முகேஷ் குமார் குல்தீப் யாதவ் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும்  பறித்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாக் கிராலி 78 ரன்கள் எடுத்தார்.  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  இதுவரை 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

 

Leave a Comment