ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்ச்சர், ஜங்கிள் ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும் பதில் அளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Leave a Comment