4 நாட்களுக்குப் பிறகு எண்ணெய் கப்பல் விடுவிப்பு!

4 நாட்களுக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலை,  கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற நாட்டில், கொட்டோனு (Cotonou) என்ற துறைமுக நகரில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி மாயமானது. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்த கப்பல் 4 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் மாலினி சங்கர் தெரிவித்துள்ளார். கப்பலை விடுவிக்க கடற்கொள்ளையர்களுக்கு பிணைத் தொகை அளிக்கப்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment