இம்மாதம் 21இல் வெளியாகும் தனுஷின் மாரி 2 படத்தின் ரன்னிங் டைம் வெளியானது!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்,வரலக்ஷ்மி சரத்குமார், டொவினோ தாமஸ்,கிருஷ்ணா, ரோபோ சங்கர், ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இந்த படம் யு/ஏ சான்று பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 29 நிமிடம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU

Leave a Comment