23 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு..!

மத்திய ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.

பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் மத்திய ரஷ்யாவில் இன்று  விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். 23 பேருடன் சென்ற எல் -410 விமானம் டாடர்ஸ்தான் குடியரசின் மீது பறக்கும் போது உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் மீட்கப்பட்டனர். விபத்து சிக்கிய விமானத்தின் புகைப்படம்  வெளியாகியுள்ளது. அதில், விமானம் இரண்டாக உடைந்திருப்பது போல தெரிகிறது. முன் பகுதி முழுமையாக நொறுங்கி உள்ளது. உயிர் பிழைத்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

சமீப காலமாக ரஷ்ய விமான விபத்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகள் பழைய விமானங்களால் நடக்கின்றன. முன்னதாக, பழைய அன்டோனோவ் ஆன் -26 விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் கிழக்கில் விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் இறந்தனர். ஜூலை மாதம், கம்சட்காவில் நடந்த விமான விபத்தில் 28 பேரும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

34 mins ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

54 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

1 hour ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

2 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

12 hours ago