தீபாவளிக்கு சர்ப்ரைஸ் தரும் கார்த்தி! தேவ் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்பணத்தை ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் கார்த்தி பைக் ரேஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் டீசர் வருகிற 5ஆம் தேதி (தீபாவளிக்கு முந்தைய நாள்) வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.                  Source CINEBAR

DINASUVADU

Leave a Comment