'கள்ளக்காதலனுடன் உல்லாசம்' கணவனை கொன்ற மனைவி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை என்னும் இடத்தில் கடந்த மாதம் 18ம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு காஞ்சிப்பட்டா, பாலக்கபாடியைச் சேர்ந்த முகமது சமீர் என்பது தெரிய வந்தது. அவர் அரபு நாட்டில் இன்ஜினியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் அவருடைய மனைவி பிரதோஸ், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது மங்களூரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன் பிரதோசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது சமீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி பிரதோஸ், 6 மாத ஆண் குழந்தையுடன் பெங்களூருவுக்கு காரில் சுற்றுலா சென்றார். அந்த காரை, முகமது யாசிக் ஓட்டினார். இந்த நிலையில் பிரதோஸ், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பிரதோஸ், கள்ளக்காதலுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு கப்பன்பார்க் பகுதியில், பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கைதான 2 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது... முகமது சமீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார். இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிரதோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார். பெற்றோர் வீட்டின் அருகே டிரைவர் முகமது யாசிக்கின் சித்தி வீடு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பிரதோசின் தந்தை ஜாசத்உசேன் கண்டித்துள்ளார்.  ஆனாலும் அவர்களுடனான காதல் தொடர்ந்தது.  இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி முகமது சமீர் சொந்த ஊருக்கு வந்தார். 15ந் தேதி காரில் அவர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். காரை முகமது யாசிக் ஓட்டினார். அப்போது முகமது சமீரை கொலை செய்ய பிரதோஸ் முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அவரை இறந்துவிட்டதாக நினைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து விட்டு,  கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர். அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அது முடியாமல் போகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர். அப்போது ஓசூர் அருகே வந்த போது குழந்தை அழுத சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார்.
பின்னர் கொடைக்கானல் மலைப்பாதையில் பட்டறைப் பாறை அருகே வைத்து 2 பேரும் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பிரதோசிடம்,  முகமது சமீர் தம்பி,  அண்ணன் எங்கே? என்று கேட்டுள்ளார்.  அங்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு  முகமது யாசிக்குடன் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் பிரதோசஸ்.  பின்னர் பெங்களூருவுக்கு வந்த போது போலீசில் அவர்கள் சிக்கி கொண்டனர் என்று அவர் கூறினார்…
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

24 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

24 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

24 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

40 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

1 hour ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

2 hours ago