கடுமையான தண்டனை பெற்ற சல்மான்…!5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்…!

2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.

ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.

20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.இதையடுத்து நேற்று சல்மான் கானின் ஜிப்சி வாகனத்தில் நட்சத்திரங்கள் அனைவரும் ஜோத்புர் வந்து சேர்ந்தனர்.2006ம் ஆண்டில் இந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான்கான் ஒருவாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.

தொடர்ந்து இவ்வழக்கின் மேல் முறையீட்டில் வழக்கில் சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மான்வேட்டை வழக்கில் விடுவித்தது . 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் 2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment