Categories: Uncategory

கடலில் மூழ்கி காணாமல் போன தீவு..அதிர்ச்சியில் ஜப்பான்..!!

ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இந்நிலையில் வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ளது ஜப்பான் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என்று ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது.

இந்தத் தீவின் பெயர் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா 1987-ல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது எவ்வளவு பெரிய தீவு என்று கூட தெரியவில்லை. சமீபத்தில் இது கடல் மட்டத்திலிருந்து 1.4 மீ (நான்கரை அடி) உயரம் மேலே வந்தது. வடக்கு ஜப்பானின் ஹொக்கய்டோ தீவிலிருந்து கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் தற்போது அந்தத் தீவு காணவில்லை.பூகம்பம், உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றங்களினாலும் தீவுகள் காணாமல் போகும், 2004 இந்தோனேசியா பூகம்பத்தில் ரிக்டர் அளவில் 9 என்று பதிவான பயங்கர நிலநடுக்கத்தில் தீவு ஒன்று சில கிமீட்டர்கள் நகர்ந்து சென்றதாக செய்திகள் எழுந்தன.

ஆனால் இந்தத் தீவு திடீரென மறைந்து போனதால் கடல் எல்லை விவகாரத்தில் ஜப்பானுக்கு சற்றே பின்னடைவு ஏற்படும் என்று ஜப்பான் கருதுகிறது.  தீவு காணாமல் போனால் என்ன என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதன் கனிமவள ஆதாரங்கள் ஒரு தேசத்துக்கு முக்கியமானது, அந்த வகையில்தான் ஒகினோடோரி தீவுகளை தனிச்சிறப்பான பொருளாதார மண்டலமாக ஜப்பான் வைத்துள்ளது.

கடும் பூகம்பம் சுனாமிகளால் ஜப்பான் தன் தீவுப்பகுதிகளை இழந்தாலும் சில வேளைகளில் புதிய நிலப்பகுதிகளும் அவற்றுக்குக் கிடைத்துள்ளன. அப்படித்தான் 2015-ல் 300மீ பரப்பளவுள்ள ஒரு நிலத்தொகுதி ஹொக்காடியோ தீவுப்பகுதியில் தோன்றியது.இந்த நிகழ்வு புதிரான பூகம்ப நடவடிக்கையால் இருக்குமோ என்று பயந்தனர், ஆனால்  நிலவியல் ஆய்வாளர்கள் நிலச்சரிவினால் நீருக்கு அடியில் இருக்கும் இது மேலே வந்திருக்கும் என்று கூறினர்.

dinasuvadu.com 

Dinasuvadu desk

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

7 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

11 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

11 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

11 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

11 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

11 hours ago