எங்களுக்கும் மனசு இருக்கு …!கேரளாவிற்கு உதவ நாங்கள் ரெடி …!பாகிஸ்தான் அதிரடி

கேரளாவிற்கு உதவி செய்ய நாங்கள் தாயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவத்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
Image result for KERALA
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு  குறைந்து வருகின்றது.
,இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து ஒன்றை கூறியுள்ளார்,அவர் கூறுகையில் பாகிஸ்தான் மக்கள் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு  பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது.மனிதாபிமான அடிப்படையில் உதவத் தயார் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.அதனால் வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகை வேண்டாம் என்று கூறியது.இதனால் பாகிஸ்தான் உதவியை இந்தியா நாடுமா ?இல்லை உதறுமா?என்பதை பொருத்து இருந்தான் பார்க்க வேண்டும்.
DINASUVADU

Leave a Comment