WPL 2024 : கிரேஸ் ஹாரிஸ் அதிரடியால் யூபி அணி அபார வெற்றி ..! தொடர் தோல்வியில் குஜராத் அணி ..!

WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 8-வது போட்டியாக நேற்று யூபி அணியும், குஜராத் அணியும் மோதியது. இது வரை WPL  தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத அணியாக குஜராத் அணி இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கியது குஜராத் அணி. இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Read More :- PKLSeason10 : விறுவிறு இறுதி ஆட்டம்.. முதன் முறையாக கோப்பை தட்டி தூக்கிய புனேரி பல்தான்.!

இதனால், களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் தொடக்கத்திலேயே பொறுமையாக விளையாடமல் பவுண்டரிகள் எடுக்க முயன்று விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியில் அதிக பட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 35 ரன்கள் எடுத்தார்.

யூபி அணியில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதை தொடர்நது எளிய இலக்கை அடைய களமிறங்கிய யூபி அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாட தொடங்கினர். இதனால் அடுத்து களமிறங்கிய வீரர்களுக்கு அது எளிதாக அமைந்தது. யூபி அணியின் 4-வது விக்கெட்டுக்கு கிரேஸ் ஹாரிஸ், களமிறங்கியது முதல் குஜராத் அணியின் அனைத்து பவுலர்களின் பந்து வீச்சையும் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

Read More :- IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!

இவர், 33 பந்துக்கு 60* ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் யூபி அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 என்ற இலக்கை எட்டியது. இதனால், யூபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யூபி அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தொடர் தோல்வி காரணமாக குஜராத் அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

Leave a Comment