IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!

IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச்-22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டி நடைபெற்று முடியும் போதும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதை அழிப்பது வழக்கமாகும்.

Read More : – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?

கடந்த 2008 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் நம்மை வியப்பூட்டும் விதத்தில் தென் ஆப்ரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனும், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளார். தற்போது, டிவில்லியர்ஸ் 2021 ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

பெங்களுரு அணியின் போட்டி என்றாலே டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தை காணவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என கூறலாம். சென்னை அணியின் ரசிகனாக இருந்தாலும் சரி, மும்பை அணியின் ரசிகனாக இருந்தாலும் சரி, டீவில்லியர்ஸ் தங்களது அணியை  எதிர்த்து அதிரடி ஆட்டம் ஆடுகிறார் என்றால் அதை மெய் மறந்து காணும் அளவிற்கு அவரது ஆட்டமானது அமைந்திருக்கும்.

Read More : – #NZvsAUS : இப்படி ஒரு நிகழ்வு எந்த வீரருக்கும் நடக்காது..! மீண்டும் களத்தில் நீல் வாக்னர் ..!

அவரது, அதிரடி ஆட்டத்திருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவரது பீல்டிங்கிற்கும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2008 முதல் 2021 வரை ஐபிஎல் தொடரில் 184 போட்டிகளில் 25 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இருக்கிறார். இவர், 2009 முதல் 2021 வரை 142 போட்டிகளில் 22 ஆட்டநாயகன் விருதை பெற்றுருக்கிறார்.

அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் 5 வீரர்கள் : 

  • ஏபி டிவில்லியர்ஸ் – 25
  • கிறிஸ் கெய்ல் – 22
  • ரோஹித் சர்மா – 19
  • டேவிட் வார்னர் -18
  • எம்.எஸ்.டோனி -17
author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment