வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது.

நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது.

கடந்த மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று வரும் சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவி  வரும் லக்னோ அணியும் இந்த போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். சென்னை அணியில் பெரிதாக ஒரு மாற்றமும் செய்யமாட்டார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், அதே லக்னோ அணியில் மாற்றமாக மாயங்க் யாதவ் இடம்பெறுவரா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளுக்கும் இடையே 3போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 3 போட்டிகளில் சென்னை அணி 1 போட்டியிலும், லக்னோ அணி 1போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மீதம் உள்ள 1 போட்டி முடிவு இல்லாமல் இருக்கிறது. இதன் படி பார்த்தால் இந்த போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்கள்

லக்னோ அணி வீரர்கள்: 

குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

14 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

28 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

35 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

2 hours ago