மைதானத்தில் ‘கிங்’ கோலிக்கு சச்சின் கொடுத்த பரிசு என்ன தெரியுமா.?

நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி  50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் டாஸ்க்கு முன் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். இந்த ஜெர்சி கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டெண்டுல்கர் அணிந்திருந்தது.

ஜெர்சியுடன், டெண்டுல்கர் கோலிக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அதைப் படித்த பிறகு விராட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இந்தியாவின் இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களின் சந்தித்த இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில்  வைரலாகி வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வெற்றி பெற்று  28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.