இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? அப்போ தினசரி உணவில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள்.

பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது.

நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில பொருட்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம்.

1. பெர்ரி பழங்கள்

  • அனைத்து வகை பெர்ரி பழங்களும் நம் இதய நலனுக்கு நல்லது தான்.
  • நாம் விரும்பி உண்ணும் கோடைகால சீசன் பழமான நாவல் பழங்களும் செர்ரி வகையை சேர்ந்ததுதான்.
  • இதய நோய்களை செர்ரி பழங்கள் தடுக்கக் கூடியது.

2. மீன்:

  • பொதுவாக இதய நோயாளிகள் அசைவம் சாப்பிடுவது என்றால் மீன் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்களே அறிவுறுத்துவார்கள்.
  • மத்தி, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற பல மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
  • இது நம் ரத்த கொழுப்பை கரைக்க கூடியது.

3. தக்காளி :

  • தினசரி நம் உணவில் தவறாது இடம்பெறும் உணவுப் பொருள் தான்.
  • இது நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை மேம்படுத்தக் கூடியது.
  • நல்ல கொழுப்பு அதிகரித்தால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

4. கீரைகள் :

  • பச்சைக் கீரைகள் அல்லது கீரையுடன் கூடிய காய்கறிகள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • எந்த அளவுக்கு மிகுதியாக கீரைகள் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இதய நலனுக்கு நல்லது.
  • இறைச்சியை போல் விலை உயர்ந்தவை அல்ல கீரைகள். எனவே தினசரி வாங்கி சாப்பிட பழகுங்கள்.

5. சாக்கலேட் :

  • சர்க்கரை நோயாளிகளுக்கு சாக்கலேட் எதிரிதான் என்பதை மறுக்க இயலாது.
  • ஆனால், அடர்ந்த நிறம் கொண்ட சாக்கலேட்டுகளில் இதய நோய்களை தடுப்பதற்கான பண்புகள் உள்ளன.
  • அதற்காக சாக்கலேட் நல்லது என்று எண்ணி மிகுதியாக சாப்பிட்டுவிட கூடாது.
Varathalakshmi

Recent Posts

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

12 mins ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

13 mins ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

32 mins ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

42 mins ago

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

1 hour ago

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப் …

1 hour ago