Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e 5G ) ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? எந்த தேதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது என்பதனை விவரமாக பார்க்கலாம்.
வி30இ 5ஜி (vivo V30e 5G ) போனின் விலையை பற்றி பார்க்கையில் 30,000க்கு இந்தியாவில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கு முந்தைய மாடலான Vivo V29e இந்தியாவில்8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.26,999க்கும் 8 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்ட மாடல் ரூ.28,999க்கும் அறிமுகம் ஆனது. எனவே, வி30இ 5ஜி (vivo V30e 5G ) போன் இந்தியாவில் ரூ.30,000க்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படியான பல அட்டகாசமான அம்சங்களை கொண்டு இருக்கும் இந்த வி30இ 5ஜி (vivo V30e 5G ) போன் எப்போது அறிமுகம் ஆகும் என்று தான் சிலர் காத்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அறிமுகம் ஆகும் தேதி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த வி30இ 5ஜி (vivo V30e 5G ) போன் ஆனது வரும் மே மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த போன் அறிமுகம் ஆன பிறகு Flipkart மற்றும் Vivo ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துவிடும். எனவே, இந்த போனின் சிறப்பு அம்சங்கள் யாருக்கெல்லாம் பிடித்து இருக்கிறதோ அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…