#BREAKING: டிஎஸ்பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொலை.! விகாஸ் துபே கைது.!

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த விகாஸ் துபே பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கூறி இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த ஜூலை 2- ஆம் தேதி அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபே பிரபல ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பலர் துப்பாக்கியுடன் சென்றனர்.

ஆனால், போலீசார் பிடிக்க வரும் தகவல் விகாஸ் துபேவுக்கு தெரியவர தனது கூட்டாளிகளோடு பதுங்கி இருந்தான். அப்போது, போலீசார் அவனது வீட்டை நோக்கி வரும் போது போலீசார் மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும், 6 போலீசார்  படு காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையை அமைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை ரவுடி விகாஷ் துபேவின் நெருங்கிய நண்பர் அமர் துபேவை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், இன்று  பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்டார்.

murugan
Tags: Vikas Dubey

Recent Posts

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

23 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

38 mins ago

ரீ ரிலீஸான தீனா…திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…

51 mins ago

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…

1 hour ago

மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?

Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…

1 hour ago

புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…

2 hours ago