சினிமா

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விடாமுயற்சி? தேதியை தட்டி தூக்கிய வேட்டையன்!!

விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில்  த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்துவிட்டதாகவும், படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட தயாரிப்பாளர்கள் விடாமுயற்சி படத்தினை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது.

அந்த சூழலில் தான், விடாமுயற்சி படத்திற்கான முதல் லுக் போஸ்டர் கூட வெளியாகியும் இருந்தது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, விடாமுயற்சி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவது என்பது சந்தேகம் தானாம். ஏனென்றால், படத்தினை தீபாவளி பண்டிகைக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

தீபாவளி பண்டிகையில் இருந்து விடாமுயற்சி படம் விலகி உள்ள காரணத்தால் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை சினிமா தகவலை தெரிவிக்கும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Recent Posts

உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!

மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…

1 hour ago

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

15 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

17 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

17 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

17 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

17 hours ago