உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!

Default Image

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,429,235 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 298,165 ஆகவும் அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பல மாதங்களாக மனிதன் வாழ்வதற்குரிய நிலையை மாற்றியதோடு வாழ்வதாரத்துக்கான வழிகளையும் அழித்து, பல லட்சக்கணக்கானோரின் உயிர்களையும் பறித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 4,429,235  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதியதாக 88,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,314 பேர் உயிரிழந்து உள்ளனர். 

 இருப்பினும், இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1,658,995 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து தற்பொழுது மருத்துவமனையில் 2,470,173 பேர் உள்ளனர்.

அவர்களில் 45,921 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எனவே “தனித்திருப்போம் விழித்திருப்போம் வீட்டிலிருப்போம்“.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்