அரசியல் ஆதாயம் காணும் இடம் இதுவல்ல..! – உச்சநீதிமன்றம்

கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த நவ.2-ஆம் தேதி ஆளுநர் ஆரீப் முகமது கான் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

முன்னதாக நேற்று நிலுவையில் இருந்த 8 மசோதாக்களில் 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஒரு மசோதாவுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில், கேரள ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

அப்போது கேரளா அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கேரள ஆளுநர் 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிகழ்வு, மேலும் தாமதப்படுத்தும் முயற்சி ஆகும். அவசர சட்டத்துக்கு அனுமதி வழங்கிய ஆளுநர் தற்போது அதே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் என தெரிவித்திருந்தனர். 

இதனை தொடர்ந்து பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநர், அரசு என ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி அரசியல் ஆதாயம் காணும் இடம் இதுவல்ல. ஆளுநருக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டது அரசியல் ஆதாயம் தேடுவதற்கானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மசோதா ஒப்புதல் விவகாரத்தில் முடிவு கிடைக்க வழக்கு தொடுக்கப்பட்டதா? அல்லது அரசியல் ஆதாயம் தேட வழக்கு தொடுக்கப்பட்டதா? 7 மசோதாக்கள் கேரளா ஆளுநர் மற்றும் முதல்வர் சந்தித்து மசோதா ஒப்புதல் குறித்து பேசி முடிவு எடுக்கட்டுமே, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக தீர்வு எட்டட்டும் என தெரிவித்ததோடு,  மசோதாக்கள் மீது காலதாமதமின்றி ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.