விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடந்து, தேமுதிக தரப்பில் நவம்பர் 20-ஆம் தேதி அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்று உள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக கூறும் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மருத்துவமனை தரப்பில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijayakanth
vijayakanth [Imagesource : Twitter]

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube